உள்ளூர் செய்திகள்
சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால நீட்டிப்பு
- வருகிற 22-ந் தேதி கடைசி நாள்
- வேளாண்மை அதிகாரி தகவல்
திருவண்ணாமலை:
சம்பா நெற்பயிர் காப்பீட்டுக் கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்ற னர்.
தமிழ்நாடு அரசால் எடுக்கப் பட்ட தொடர் முயற்சியால் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக் கான கடைசி தேதியை வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொது சேவை மையங்கள் செயல்படுவதால் இதுவரை சம்பா பயிர் காப்பீடு செய்யாத திருவண்ணாமலை மாவட் டத்தை சேர்ந்த விவசாயிகள் வருகிற 22-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையலாம் என திருவண் ணாமலைவேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவிற்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.