உள்ளூர் செய்திகள்

சார்பு நீதிமன்றம் திறப்பு விழா

Published On 2023-11-17 15:13 IST   |   Update On 2023-11-17 15:13:00 IST
  • வட்டார மகளிர் சேவை மைய கட்டிடத்தில் இயங்க உள்ளது
  • நீதிபதி, வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்

வந்தவாசி:

வந்தவாசியில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த சார்பு நீதிமன்றம் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார மகளிர் சேவை மைய கட்டிடத்தில் இயங்க உள்ளது.

திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிபதி பி.மதுசூதனன் தலைமை தாங்கி சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட கூடுதல் நீதிபதி இருசன் பூங்குழலி, தலைமை குற்றவியல் நடுவர் வி.ஜெகன்னாதன், சார்பு நீதிபதி சரண்யா, உரிமையியல் நீதிபதி செந்தில்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், அன்பரசு, ஜெ.சி.பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News