உள்ளூர் செய்திகள்
கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் விற்றவர் கைது
- 100 பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி தாலுகா போலீசார் மற்றும் தனிப்படையினர் சோமந்தாங்கல் கூட்ரோட்டில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வெட்டியாந் தொழுவம் பகுதியை சேர்ந்த பழனி (வயது 47) என்பதும், இவர் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இவரிடம் இருந்து 100 கர்நாடகா மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் பழனி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.