தர்மாபுரம் கிராமத்தில் ரூ.30.7 லட்சத்தில் ரேசன் கடை
- எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மாபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததை இடித்துவிட்டு ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
மேலும் அதே பகுதியில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ரேசன் கடை இப்பகுதிக்கு வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் 15-வது மாநில மானிய திட்டத்தின் மூலம் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட்டது.
இப்பகுதியில் கட்டப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆன 2 கட்டிடங்களையும் செய்யாறு எம்.எல்.ஏ. ஜோதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் தர்மபுரம் பகுதியில் உள்ள 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக புதிய கட்டிடத்தில் இருந்து தமிழக அரசின் இலவச அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் டி.ராஜி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மோகனவேல் தர்மபுரம் ராஜேந்திரன் தெய்வமணி தயாளன் அம்பிகாபதி மாவட்ட பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.