விநாயகர் சிலைகளை வைக்க கட்டுப்பாடு
- கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
- கலெக்டர் தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவ ட்டத்தில் தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமா செட்டிகுளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்.
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்ய ப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளை தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை களை பயன்படுத்தலாம். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது.
சிலைகளுக்கு வர்ணம் பூச நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு அணிவிக்கும் அலங்கார ஆடைகள் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட ஆடைகளை மட்டும் அணிவிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்ட இடங்களில் மட்டுமே மாசுக்கட்டு ப்பாட்டு வாரி யத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்படும்.
மாவட்ட மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்று ச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.