நகராட்சி தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை
- கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கின்றன
- கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த குடியிருப்பு வாசிகள்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டவுன் 33 வார்டுகள் உள்ளன.
மேலும் தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி நகர மன்ற தலைவராவும் துணை தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பாரிபாபு உள்ளிட்ட 33-வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர்.
மேலும் 2-வது வார்டில் நீண்ட நாட்களாகவே கழிவுநீர் கால்வாயை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கின்றன.
இது சம்பந்தமாக ஆரணி நகராட்சியில் புகார் அளித்து எந்த நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை தூய்மை பணியாளர் பற்றாக்குறையால் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ள தாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகின்றன.
இந்நிலையில் 2-வது வார்டில் கால்வாய் அடைப்பை அப்பகுதி மக்களே தானாக முன் வந்து கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நகராட்சியில் தூய்மை பணியாளர்ககள் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வலியுறுத்தினர்.