- வசூல் செய்யும் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டவில்லை என புகார்
- போலீசார் சமரசம் செய்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் கிளை அஞ்சலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மாபாளையம் கிராமத்தில் வசிக்கும் ராகினி என்பவர், சேமிப்பு கணக்கில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார்.
ராகினி, அம்மாபாளையம் கிராமத்தில் வசூல் செய்து வரும் பணத்தை சம்பந்த ப்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் ராகினிக்கு செங்கம் அருகே வசிக்கும் நபருடன் திருமணமானது.திருமணமான பின்னர் தபால் சேமிப்பு கணக்கில் பணம் வசூல் செய்யும் பணியை, அம்மாபாளையம் கிராமத்திலேயே செய்து வந்தார்.
ஆனால் வசூல் செய்யும் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டாமல் இருந்து வந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் தபால் அலுவலக அலுவலர்களிடம் புகார் செய்ததன் பேரில், விசாரணை நடத்தினர்.
இதனால் தற்போது தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராகினியிடம் நேரில் விசாரணை நடத்த தபால் அலுவலக அலுவலர்களிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒண்ணுபுரம் அஞ்சலகத்திற்கு வந்திருந்தனர்.
இந்த விசாரணைக்கு செங்கம் பகுதியில் தனது கணவர் வீட்டில் வசிக்கும் ராகினி நேரில், விளக்கம் அளிக்க வந்தார்.
அம்மாவின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஒண்ணுபுரம் அஞ்சலகத்தில் வந்து ராகினியிடம் தாங்கள் கட்டிய பணத்தை வழங்கவேண்டும் என முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்தனர். தபால் அலுவலர்கள் முறைப்படி ராகினியிடம் பணம் வசூலித்து வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைப்பதாக தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.