உள்ளூர் செய்திகள்
வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முக நாதர் கோவிலில் கந்த சஷ்டி, சூரசம்ஹாரத்தை தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகநாதர் சாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேளதாளத்துடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டட வள்ளி, தெய்வானை, சண்முகநாதர் சாமிக்கு சிறப்பு யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், மகா தீபாரதனையும் நடந்தது. இதில் வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.