உள்ளூர் செய்திகள்

டாக்டர் எ.வ.வே கம்பன் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கிய காட்சி.

திருவண்ணாமலை நகராட்சி தூய்மை பணிக்கு 39 குப்பை வாகனங்கள்

Published On 2023-10-03 13:24 IST   |   Update On 2023-10-03 13:24:00 IST
  • டாக்டர் எ.வ.ேவ.கம்பன் வழங்கினார்
  • அய்யங்குளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் தூய்மை அருணை இயக்கம் பல்வேறு தூய்மை பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பின் அமைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இருந்து வருகிறார்.

இந்த அமைப்பின் சார்பில் அண்ணாமலையார் தெப்பல் உற்சவம் நடை பெறும் அய்யங்குளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது திருவண்ணா மலை நகரின் தூய்மை பணிக்கு உதவிடும் வகையில் தூய்மை அருணை அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளுக்கும் தலா ஒரு குப்பை சேகரிக்கும் வாகனம் என 40 லட்ச ரூபாய் மதிப்பில் 39 குப்பை சேகரிக்கும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தூய்மை அருணை அமைப்பின் மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் குப்பை சேகரிக்கும் வாகனங்களின் சாவியை தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார்.

நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி, தூய்மை அருணை மேற்பார்வை யாளர்கள் இரா.ஸ்ரீதரன், ப.கார்த்தி வேல்மாறன், ப்ரியா விஜயரங்கன், நகர மன்ற துணைத்தலைவர் சு.ராஜாங்கம், குட்டி புகழேந்தி, வக்கீல் சீனிவாசன், ஏ.ஏ.ஆறுமுகம், ஷெரீப், நகர மன்ற உறுப்பினர் கோபி சங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News