திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
- வருகிற 7-ந்தேதி நடக்கிறது
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க.செயற் குழுக்கூட்டம் வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால் தலைமை வகிக்கிறார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அ.ராஜேந் திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் வருகிற 21,22-ந் தேதிகளில், தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை வருகை குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி குழுவின் அலைபேசி எண்களை முறைப்படுத்துதல், கூட்டுறவு சங்கத்தேர்த லுக்கான புதிய உறுப்பினர் சேர்த்தல், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், சென்னை மகளிர் அணி மாநாடு மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
இதில் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். எனவே மாநில அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.