உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

Published On 2023-10-02 12:51 IST   |   Update On 2023-10-02 12:51:00 IST
  • ஏற்பாடுகள் தீவிரம்
  • வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடக்கிறது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த மாத இறுதி வாரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மாநில அளவிலான 3 நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.

அதனை முதல்-அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட உள்ளார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

மேலும், திருவண்ணாம லையில் மண்டல அளவிலான தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுவதற்கான ஆயத்த பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார்.

இந்த நிலையில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி பகுதியில் உள்ள திறந்த வெளி மைதானதத்ல் பிரமாண்ட பந்தல் அமைத்து நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அதை ஒட்டி, விழா நடைபெற உள்ள இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைத்தல், உணவு அரங்கம் உள்ளிட்ட வசதிகளை செய்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின் போது, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், எம்.பி. சி.என். அண்ணா துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏ. பெ.சு.தி.சரவ ணன், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செய லாளர் பிரியா விஜயரங் கன், துரை வெங்கட். எம். ஆர். கலைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News