உள்ளூர் செய்திகள்

உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

Published On 2023-08-17 13:42 IST   |   Update On 2023-08-17 13:42:00 IST
  • 15 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என புகார்
  • அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 35-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கடந்த 15 மாதமாக சம்பளம், 4 மாத போனஸ் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அவ்வப்போது துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை வைத்தும் சம்பளம் வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தூய்மை பணிியாளர்கள் ஜோலார்பேட்டையில் உள்ள அரசு தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் உதவி தொடக்க கல்வி அலுவலர் ரமணனிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு அவர், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

இதனை அடுத்து தூய்மை பணியாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தெரிவித்த போது, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பெற வேண்டும் என கூறியுள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News