உள்ளூர் செய்திகள்
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க கோரிக்கை
- திருப்பூர் மாவட்டம் ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4-ம் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
- ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
திருப்பூர்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் திருப்பூர் மாவட்டம் சார்பில் 4-ம் மாவட்ட மாநாடு திருப்பூர் கே.ஆர்.எஸ். நினைவு வளாகத்தில் நடைபெற்றது.
இதில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், மாதந்தோறும் மருத்துவப்படி ரூ. 1000 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.