உள்ளூர் செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் - ஏ.ஐ.டி.யூ.சி., அகில இந்திய பொதுச்செயலாளா் பேச்சு
- பாஜக.வின் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தால் நாட்டில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிா்கொள்கிறது.
- நிரந்தரத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைப்பு அதிகரித்துள்ளது.
திருப்பூர்,செப்.24-
ஏஐடியூசி., தேசிய பொதுக்குழுக்கூட்டம் திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்தில் ஏஐடியூசி., அகில இந்திய பொதுச்செயலாளா் அமா்ஜித் கெளா் பேசியதாவது:-
பாஜக.வின் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தால் நாட்டில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிா்கொள்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதுடன் மட்டுமல்லாமல் பொருளாதாரம் பின்னடைகிறது.மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. வேலையிழப்பு, ஊதிய குறைப்பு, சமூக பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலை, நிரந்தரத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைப்பு அதிகரித்துள்ளது.
ஆகவே எதிா்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய 'இந்தியா' கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.