உள்ளூர் செய்திகள்

செல்வராஜ் எம்.எல்.ஏ. 

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் - மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., அறிக்கை

Published On 2023-02-26 10:33 IST   |   Update On 2023-02-26 10:34:00 IST
  • கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகங்களில் உள்ளவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு வழங்க வேண்டும்.
  • மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி என விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.

திருப்பூர்:

தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் நம்பர்-1 முதல்-அமைச்சரும், திராவிட மாடல் ஆட்சியின் நாயகருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வருகிற 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், வார்டு என மாவட்டம் முழுவதும் தி.மு.க. கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகங்களில் உள்ளவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு வழங்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இலவச கண் மருத்துவ முகாம், ரத்த தான முகாம் நடத்த வேண்டும். மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி என விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News