உள்ளூர் செய்திகள்

நாட்ராய சாமி கோவில் வளாகத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு ஒத்திகை வழங்கப்பட்ட காட்சி.

தீ விபத்துக்களை தடுக்கும் வழிமுறைகள் - வெள்ளகோவில் தீயணைப்பு துறையினர் விளக்கம்

Published On 2023-04-21 16:10 IST   |   Update On 2023-04-21 16:10:00 IST
  • சமையல் செய்யும் இடத்தின் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.
  • வீட்டினுள் எரிவாயு கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுகள் பயன்படுத்தக்கூடாது.

வெள்ளகோவில் :

தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி தலைமையில், நாட்ராய சாமி கோவில் வளாகத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது கோவில் செயல் அலுவலர் திலகவதி மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் முன்பு தீ தடுப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான , எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது. சமையல் செய்யும் இடத்தின் அருகில் குழ ந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. சமையல் முடிந்தவுடன் அடுப்பை முழுவதும் அணைத்துவிடவேண்டும். கேஸ் பயன்படுத்தி சமைத்து முடித்ததும் பின்னர் பர்ணர் மற்றும் சிலிண்டர் வால்வுகளை முழுவதுமாக மூடி விட வேண்டும்.

வீட்டினுள் எரிவாயு கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுகள் பயன்படுத்தக்கூடாது. செல்போன் உபயோகிக்க கூடாது. சமைக்கும் போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். சிம்னி விளக்குகளை படுக்கை அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகைபிடிக்கக் கூடாது. பொதுமக்கள் கூடி உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை திறந்தவெளி மைதானத்தில் வெடிக்க வேண்டும். ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடாமல் படுத்து உருண்டும், போர்வையால் மூடி தீயை அணைக்கவும். தீ புண்ணில் குளிர்ந்த நீரை ஊற்றவும். பேனா மை, எண்ணெய் போன்றவைகளை உபயோகிக்கக்கூடாது. தீக்காயத்தை அழுத்தித் துடைக்க கூடாது. புகை சூழ்ந்து உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தொழில் கூடங்களில் தீயை ஆரம்பநிலையில் அணைக்க தீதடுப்பு சாதனங்களை உபயோகிக்க வேண்டும். தொழில் கூடம் மற்றும் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பு சாதனங்களை அணியவேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் ஒரு வாரத்திற்கு தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் செய்து காண்பிக்கப்படும் என வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.

Tags:    

Similar News