பல்லடம் நகரில் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய கோரிக்கை
- குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது.
பல்லடம் :
பல்லடம் நகரில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அதனை சரி செய்ய போலீசார் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளன. குறிப்பாக பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது. இதனால் குற்றசம்பவங்கள், விபத்துகளை ஏற்படுத்தி விட்டுச் செல்லும் வாகனங்களை கண்டறிய முடியாத நிலை உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், கண்காணிப்பு கேமராக்களின் உதவியால் பல்வேறு இடங்களை போலீசார் கண்காணிக்கலாம். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து பழுதாகி உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.