உள்ளூர் செய்திகள்

செயற்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

உடுமலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

Published On 2023-06-09 10:39 GMT   |   Update On 2023-06-09 10:39 GMT
  • புதிய நிர்வாகிகள் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார் .
  • ஆண்டுவிழா தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துகளையும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

உடுமலை :

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க உடுமலை கிளை சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் புலவர் நடராஜன் தலைமை வகித்தார் செயற்குழு உறுப்பினர் சிவராஜ் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் இயற்கை எய்திய உறுப்பினர்களுக்கும் ஒரிசா ெரயில் விபத்தில் இறந்தவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர் நடராஜன் கடந்த மாதம் நடைபெற்ற ஆண்டு விழா செயல்பாடுகள் குறித்து பேசினார். தற்போது பதவியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்ப தற்கான அவசியம் ஏற்பட்டது எனவும் புதிய நிர்வாகிகள் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார் .ஆண்டுவிழா தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துகளையும் கேட்டுக் கொள்ளப்பட்டது. கடந்த மாத கூட்ட அறிக்கையை செயலாளர் அழகர்சாமி வாசித்தார். பொருளாளர் ஞானபண்டிதன் வரவு செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெற்றார். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்ட அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 23 -26-ம் ஆண்டு வரை 3ஆண்டுக்கான நிர்வாகிகள் பட்டியல் அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . முடிவில் துணைத்தலைவர் சின்னச்சாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News