உள்ளூர் செய்திகள்
வாலிபர் பலியான தனியார் பஸை படத்தில் காணலாம்.
தாராபுரத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
- ஒரு பெண் குறுக்கே வந்தார்.
- மோட்டார் சைக்கிளை திருப்பிய போது எதிரே வந்த தனியார் பஸ் டயரில் சிக்கினார்.
தாராபுரம் :
தாராபுரம் பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை ரவுண்டானா அருகே இன்று காலை 9 மணியளவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ஒரு பெண் குறுக்கே வந்தார்.
அவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பிய போது எதிரே வந்த தனியார் பஸ் டயரில் சிக்கினார். இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்தில் பலியானவர் தாராபுரத்தை சேர்ந்த இமானுவேல் என்பவரின் மகன் ரூபன் (வயது 26) என்பதும் அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.