தேசூர்-சென்னைக்கு மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும்
- ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
- சிமெண்டு சாலை அமைக்க வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு ஒன்றி யக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.ஸ்ரீதர், ந.ராஜன்பாபு, துணைத்த லைவர் விஜயலட்சுமி தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வந்தவாசியை அடுத்த தேசூரிலிருந்து பாஞ்சரை, கீழ்புத்தூர், சிவனம், ஜப்திகாரணி, நடுக்குப்பம், வந்தவாசி வழியாக சென்னைக்கு மீண்டும் அரசுப் பஸ் இயக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு உறுப்பினர் பா.தசரதன் பேசினார்.
கொடியாலம் ஊராட்சியில் சுடுகாட்டு பாதைகளை சீரமைக்க வேண்டும், இருளர் காலனிக்கு சிமெண்டு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஒன்றியக்குழு உறுப்பினர் தீபா வெங்கடேசன் பேசினார்.
பின்னர் பேசிய ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.