உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரே நேரத்தில் 1008 சங்கு முழங்கும் விழா
- உலக நன்மைக்காக நடந்தது
- உலக சாதனை சான்று வழங்கப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உலக நன்மைக்காக 1,008 சங்கு முழங்கும் விழா நடைபெற்றது.
முன்னதாக கிரிவலப்பாதையில், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மஹாகுபேர லஷ்மியாகம் மற்றும் கோ பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் சோப கிருது தமிழ் புத்தாண்டு தினத்தில் நடைபெற்றது.
1,008 சிவலிங்கத்திற்கு மஹா புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்ட சங்கை ஒரே நேரத்தில் 1,008 சிவனடியார்கள் மற்றும் சாதுக்கள் ஒன்றிணைந்து சங்கு ஒலி முழங்கும் சாதனை விழா நடைபெற்றது. முன்னதாக பரதநாட்டியம், குத்து விளக்கு ஏற்றுதல், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஒரே நேரத்தில் 1,008 சங்கு முழங்கிய நிகழ்வுக்கு யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை சான்று வழங்கப்பட்டது.