உள்ளூர் செய்திகள்

இன்று 141-வது பிறந்தநாள்: நெல்லையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Published On 2022-12-11 09:19 GMT   |   Update On 2022-12-11 09:19 GMT
  • பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
  • பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

நெல்லை:

மகாகவி பாரதியாரின் 141- வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாநில வழக்கறிஞர் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், ஐ.என்.டி.யூ.சி. ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மண்டல தலைவர்கள் அய்யப்பன், கெங்காராஜ்,ராஜேந்திரன், வட்டார தலைவர்கள் கணேசன், காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் இலந்தை ராமகிருஷ்ணன்,ஆட்டோ அருள்ராஜ், மகேந்திரன், அனந்த பத்மநாபன், கிருஷ்ண மூர்த்தி, வர்த்தக காங்கிரஸ் ராஜகோபால்,மறுகால் குறிச்சி செல்ல பாண்டியன், வக்கீல் பினிக்ஸ், மகளிர் அணி மெட்டில்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க.

பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நிர்வாகிகள் சுரேஷ், வேல் ஆறுமுகம் உள்ளிட்டோர் சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இதில் மாநகர் மாவட்ட செயலாளர் துரைபாண்டியன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, மணிமாறன், மானூர் கிழக்கு ஓன்றிய செயலாளர் ஆதிபாண்டியன், மேலப்பாளையம் பகுதி தலைவர் டிக்முத்து, டவுன் பகுதி செயலாளர் சங்கர், பரமசிவபாண்டியன், ராஜா, மாணவரணி பாண்டி, பழனி, முத்துவளவன், சுரேஷ்பாண்டியன், ராஜன் வேளாளர், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News