உள்ளூர் செய்திகள்
பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் பனியின் தாக்கமும், பகலில் வெயிலின் தாக்கமும் இருந்து வந்தது. சில நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, திருமூர்த்திமலை உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.