உள்ளூர் செய்திகள்
பயிற்சி கூட்டம் நடைபெற்ற காட்சி.
அம்பையில் கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
- சூழல் சரக வனக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார திறன் மேம்பாட்டிற்காக ஆரி எம்பிராய்டரிங்க் ஒர்க் தையல் பயிற்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு தலைமை தாங்கினார்
கல்லிடைக்குறிச்சி:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை மற்றும் பாபநாசம் சூழல் சரக வனக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார திறன் மேம்பாட்டிற்காக ஆரி எம்பிராய்டரிங்க் ஒர்க் தையல் பயிற்சி நடைபெற்றது.
அம்பையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, வனவர் மோகன்தாஸ், பயிற்சி நிலைய நிறுவனர் பிரியா மற்றும் சூழல் மேம்பாட்டு தன்னார்வலர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.