உள்ளூர் செய்திகள்
கால்நடை மருத்துவமனை ஊழியர் வீட்டில் திருட்டு
- சுரேஷ் குமார் கால்நடை மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
- சுரேஷ் குமார் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை சண்முகா ஹாஸ்பிடல் ரெசிடென்ஸ் அருகில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் (வயது45). இவர் கால்நடை மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் சம்பவதன்று மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு சகோதரன் திருமணத்திற்கு திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக வெளியே சென்றுள்ளார். மீண்டும் அவர் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5.5 பவுன் நகை மற்றும் 390 கிராம் வெள்ளி என மொத்தம் ரூ. 2 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சுரேஷ்குமார் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.