உள்ளூர் செய்திகள்
ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பறிமுதல்
- ஒரு லட்சம் பணம் பறிமுதல்
- ஒருவர் கைது
திருச்சி,
திருச்சி லால்குடி பகுதியில் போலீசார் குட்கா ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பக்ரூதீன் என்பவர் குட்கா மற்றும் புகையிலை வியாபாரம் செய்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. அய்யன்வாய்க்கால் கரை பகுதியில் பக்ரூதீனுக்கு சொந்தமான இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 53 மூட்டை தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 8 லட்சம் மதிப்பிலான அந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பக்ரூதீன் கைது செய்யப்பட்டார்.