அறிவியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம்
- அறிவியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது
- திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்
திருச்சி
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் கல்வி புலமும் அனைத்து அறிவியல் துறைகளும் இணைந்து நிலையான மற்றும் நம்பகத் தன்மை வாய்ந்த எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு என்ற கருப்பொருளில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் பால் தயாபரன் தலைமை வகித்தார்.
ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ஐக்கிய குடியரசை சேர்ந்த லிவர் ஃபூல் ஹோப் பல்கலைக்கழக சார்பு துணை வேந்தர் முனைவர் அதுல்யா நகர் மற்றும் ஐக்கிய குடியரசின் ரீடிங் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் மரபணுவியல் பேராசிரியர் முனைவர் விமல் கரணி ஆகியோர் அங்கம் வகித்தனர்.
தொடக்க நாள் நிகழ்ச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் சிறப்புரையாற்றினார். இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பவியல் துறை இயக்குனர் முனைவர் நகுல் பரசார் மற்றும் கனடா நாட்டின் திருத்துவ மேற்கத்திய பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் முனைவர் பிலிப் லையர்டு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இக்கருத்தரங்கில் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறையின் மூத்த அறிவியல் அறிஞர் முனைவர் வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினார் . மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கல்லூரி துணை முதல்வர்கள் அழகப்பா மோசஸ், சத்தியசீலன், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் வயலட் தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.