திருச்சி கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் முகாம்
- திருச்சி இருதயபுரம் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குதல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
- இவ்வங்கியில் சிறு வணிகர் கடன் ரூ.27.35 லட்சமும் மற்றும் இதர கடன்கள் உள்பட ெமாத்தம் ரூ.1869.24 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது
திருச்சி:
திருச்சி இருதயபுரம் கூட்டுறவு வங்கியில் கடன் மேளா திட்டம், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சியை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் திருச்சி சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் ஜி.சாய்நந்தினி கலந்து கொண்டு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் கடன் வாங்கி பயன்பெறும் வழிமுறைகள் பற்றி ஆலோசனைகள் வழங்கினார். திருச்சி இருதயபுரம் கூட்டுறவு வங்கி 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இவ்வங்கியில் மொத்தம் 18,783 உறுப்பினர்கள் உள்ளனர். மொத்த உறுப்பினர்களின் வைப்புதொகை ரூ.1681.70 லட்சம், சிறுவணிகர் கடன் ரூ.27.35 லட்சமும் மற்றும் இதர கடன்கள் உள்பட ெமாத்தம் ரூ.1869.24 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் இருதயபுரம் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் டி.மீனாம்பிகை, வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஜென்சி, வங்கியின் மேலாளர் சி. செந்தில்குமார், இருதயபுரம் கூட்டுறவு வங்கிதலைவர் பி. செல்லப்பன்,
துணைத்தலைவர் ஏ.ஜெயராஜ், வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அ.ஹபிபுல்லா, வங்கி அலுவலர்கள் மற்றும் வங்கிப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.