உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்.

வடக்குபட்டம் ஊராட்சி தலைவர் தேர்தல் - வாக்காளர் பட்டியல் வெளியீடு

Published On 2022-06-18 09:14 GMT   |   Update On 2022-06-18 09:14 GMT
  • இந்த ஊராட்சியில் தலைவராக பதவி வகித்த நடராஜன் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்ததை அடுத்து, தலைவர் பதவி காலியாக உள்ளது.
  • வடக்குபட்டம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் நடப்பதற்கு முன்பு வரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகியவற்றை செய்து கொள்ளலாம்.

நீடாமங்கலம்:

வலங்கைமான் தாலுகா வடக்குபட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் முன்னேற்பாடு பணி நடைபெற்றது. அதை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.இந்த ஊராட்சியில் தலைவராக பதவி வகித்த நடராஜன் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்ததை அடுத்து, தலைவர் பதவி காலியாக உள்ளது.

அதை தற்செயல் தேர்தல் நடத்தும் முகமாக மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக, வடக்கு பட்டம் ஊராட்சியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன் ,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் வடக்கு பட்டம் ஊராட்சியின் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.இந்த ஊராட்சியில் மொத்தம் 6 வார்டுகள், 378 ஆண் வாக்காளர்கள் 416 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 794 வாக்காளர்கள் உள்ளனர். வடக்குபட்டம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் நடப்பதற்கு முன்பு வரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகியவற்றை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News