உள்ளூர் செய்திகள்

பெருமாநல்லூர் அருகே வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி

Published On 2023-02-21 12:18 IST   |   Update On 2023-02-21 12:18:00 IST
  • பார்வையாளர்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பெருமாநல்லூர் :

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஊராட்சி பொடாரம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர்கள் ராசு , பாபு , செல்வராஜ் , முருகசாமி, சிவகாமி , ஜோதிமணி , ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்மி அடித்து பொதுமக்களை மகிழ்வித்தனர். 300க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆட்டத்தை கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொடாரம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News