உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் திறன் பயிற்சிக்கு 68 பேர் தேர்வு

Published On 2022-11-13 09:06 GMT   |   Update On 2022-11-13 09:06 GMT
  • இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்ப டுத்தப்பட்டு வரும் தீனதயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நிகழ்ச்சி குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 265 இளைஞர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் 68 பேர் இளைஞர் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு 3 மாதம் பயிற்சி வழங் கப்பட்டு தொடர்ந்து அங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் என். செந்தில்குமரன் தலைமை தாங்கினார் .

உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வன் வரவேற்றார் . சிறப்பு அழைப்பா ளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. , குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் . சவுந்தரராசன் , குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ந் தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் எம் . கார்த்திகேயன் , உதவிதிட்ட அலுவலர் மோகன் குமார் உள்பட கலர் கலந்து கொண் டனர் . முடிவில் குடியாத்தம் வட்டார மேலாளர் திவ்யா நன்றி கூறினார் .

Tags:    

Similar News