தமிழ்நாடு

அமலாக்கத்துறை சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு

Published On 2025-01-03 08:19 GMT   |   Update On 2025-01-03 08:19 GMT
  • அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
  • தலைமை செயலக காலனியை சுற்றிலும் போலீசார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை:

வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று காலையில் தலைமை செயலகத்துக்குள் நுழைந்த கார், மோட்டார் சைக்கிள்கள் உள்பட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

தலைமை செயலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட அனைவரும் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனை எதிரொலி கவே இதுபோன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமை செயலக காலனியை சுற்றிலும் போலீசார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கிடமான நபர்கள் சுற்றுகிறார்களா? என்பது பற்றியும் போலீசார் கண்காணித்தனர்.

Tags:    

Similar News