உள்ளூர் செய்திகள்
கார்த்திகை மாத பிறப்பையொட்டி வெறிச்சோடிய வேலூர் மீன் மார்க்கெட்
- பெரிய வஞ்சரம் மீன் ரூ.1000 விற்பனை செய்யப்பட்டது
- மீன்களின் விலையும் கனிசமாக குறைந்துள்ளன
வேலூர்:
கார்த்திகை மாதம் பிறந்ததால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.
மேலும் நேற்று கந்த சஷ்டி விழா முடிந்து இன்று சாமிக்கு திருக்கல்யாணம் நடப்பதால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்தனர்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை எப்போதும் அதிக அளவில் கூட்டம் அலைமோதும் வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்களின் விலையும் கனிசமாக குறைந்துள்ளன.
பெரிய வஞ்சரம் மீன் ரூ.1000, சிறிய வஞ்சரம் மீன் ரூ.500, இறால் ரூ.350 முதல் ரூ.450, கட்லா ரூ.160, நண்டு ரூ.350 முதல் ரூ.450, மத்தி ரூ.140 முதல் ரூ.160, ஷீலா ரூ.350 என மீன் இன்று விற்பனை செய்யப்பட்டது.