உள்ளூர் செய்திகள்

ஆடி கிருத்திகையையொட்டி ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் முருகர், சைதாப்பேட்டை பழனியாண்டவர் முருகன் கோவில் உற்சவர் வள்ளி தெய்வயானையுடன் பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

முருகர் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா

Published On 2022-07-23 14:51 IST   |   Update On 2022-07-23 14:51:00 IST
  • சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

வேலூர்:

ஆடி கிருத்திகையை யொட்டி முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று முதல் முருகன் கோவில்களில் விழா களைகட்ட தொடங்கியது.

ஆடிக்கிருத்திகை விழா

இந்த நிலையில் பரணி கிருத்திகையையோட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

இன்று அனைத்து முருகர் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா நடந்தது.

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமன பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

வேலூர் ராணிப்பேட்டை பகுதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை கோவில், கரிகிரி 66 புத்தூர் மலையில் உள்ள முருகன் கோவில், ரத்தினகிரி பாலமுருகன் கோவில், காட்பாடி காங்கேயநல்லூர் முருகன் கோவில், ஓடைப்பள்ளியார் கோவில் அமைந்துள்ள முருகன் கோவில், சைதாப்பேட்டை பழனியாண்டவர் கோவில், பாலமதி குழந்தை தண்டாயுதபாணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பாத யாத்திரையாக காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து திருத்தணிக்கு நேற்று முன்தினம் முதல் 170 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் கைலாசகிரி மலை, மகாதேவமலை, வள்ளிமலை, பாலமதி உள்ளிட்ட முருகன் கோவில்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அணைக்கட்டு அருகே வேலாடும் தணிகை மலை பாலமுருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மலர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திகடன் செலுத்தினர். இதையொட்டி மூலவர் பாலமுருகன் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

Similar News