உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் ஆட்கள் இன்றி வெறிச்சோடிய காட்சி.

மீன், இறைச்சி கடைகள் வெறிச்சோடியது

Published On 2022-09-18 14:39 IST   |   Update On 2022-09-18 14:39:00 IST
  • புரட்டாசி மாதம் பிறந்ததால் அசைவ பிரியர்கள் தவிர்ப்பு
  • விலையும் கணிசமாக குறைந்தது

வேலூர்:

புரட்டாசி மாதம் பிறந்ததால் பெரும்பாலான இந்துக்கள் இந்த மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கும். வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் குவிவார்கள்.

கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் மீன்களின் விலை கணிசமான அளவு குறைந்து உள்ளது.

இருப்பினும் புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி பொதுமக்கள் யாரும் மீன் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டாததால் கடைகளில் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமானோர் மீன் வாங்க வருவார்கள் என வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில் ஆட்கள் இன்றி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

இதேபோல் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மீன் இறைச்சி கடைகளும் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News