உள்ளூர் செய்திகள்
ரேசன் கார்டில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
- காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் காட்டுப்புதூர் மடை யாப்பட்டு கோரந்தாங்கல், அகரம்சேரி, அரும்பாக்கம், கொத்தப்பள்ளி ஆகிய கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கு பொது மக்கள் விண்ணப்பித்தனர்.
இந்த சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.