உள்ளூர் செய்திகள்

கால்நடை உரிமையாளர்களுக்கு விலையில்லா மருந்துகள் வழங்கப்பட்டது.

கால்நடை மருத்துவ முகாம்

Published On 2023-10-24 15:09 IST   |   Update On 2023-10-24 15:09:00 IST
  • 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நிகழ்வு நடந்தது.
  • முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சீர்காழி இணைந்து சீர்காழிக்கு அருகில் உள்ள சாந்தப்புத்தூர் கிராமத்தில் மயிலாடுதுறை கால்நடை பராமரிப்பு துறை சார்பாக 40க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நிகழ்வு மற்றும் கால்நடைகளுக்கு அனைத்து வகையான மருத்துவ பரிசோதனை, விலையில்லா அனைத்து வகை மருந்துகளும் கால்நடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கம் சீர்காழி டெம்பிள் டவுன் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

மாவட்ட உதவி ஆளுநர் கணேஷ், ரோட்டரி சங்கம் சீர்காழி டெம்பிள் டவுன் செயலர் ரவி, பொருளாளர் சந்தோஷ், முன்னாள் செயலர்கள் குமார், பிரபாகரன், முன்னாள் தலைவர் வைத்தியநாதன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் சுதீஷ் ஜெயின் கலந்து கொண்டார்.

கால்நடை மருத்துவர்கள் டாக்டர்.ரமாபிரபா, டாக்டர்.கார்த்திகேயன் , கால்நடை ஆய்வாளர் ராஜீ, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் எம்.ராஜா, எம்.மாலதி ஆகியோர்கள் கலந்துகொண்டு அனைத்து கால்நடைகளுக்கு மருத்துவ பணியினை ஆற்றினர். நிகழ்வில் சுபம் வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் கே.வித்யா, பள்ளி நிர்வாக அலுவலர் சி.சண்முகம், மற்றும் அனைத்து பகுதியிலிருந்தும் கிராம மக்கள், 30க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியரும், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலருமான முரளிதரன் ,நன்றி கூறினார்.

Tags:    

Similar News