ராகுல் காந்தி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் வசந்த் எம்.பி.
- தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, படிப்பு செலவுக்கான உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
- மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு விஜய் வசந்த் எம்.பி. தங்க மோதிரம் வழங்கினார்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மகளிர் காங்கிரஸ் தலைவி சோனி விதுலா, மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் லாரன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து ராகுல் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, படிப்பு செலவுக்கான உதவித்தொகை, மருத்துவ உதவி தொகை, கோவில் நன்கொடை என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவிகள் சோனி விதுலா, வதன நிஷா, தேசிய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், மண்டல தலைவர்கள் சிவபிரபு, செல்வன், எஸ்.சி எஸ் டி மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கிய ராஜன், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஸ்ரீனிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் முனைவர் சுபுகான் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தையல் இயந்திரங்கள், கல்வி மற்றும் மருத்துவ நல நிதி உதவிகளை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.