கோவிலை சுற்றி குவிந்து கிடக்கும் குப்பைகள்
- கோவிலை சுற்றி குவிந்து கிடக்கும் குப்பைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- இந்த கோவிலானது குரு சாபம் நீக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தலம் ஆகும்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 36 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் முறையாக குப்பைகளை அள்ளாமலும், சாக்கடைகளை தூர் வாராமலும் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோவில் சொக்கலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது குரு சாபம் நீக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தலம் ஆகும். இன்னும் சில தினங்களில் அந்த கோவிலில் ஆனித்திருவிழா நடைபெற உள்ளது.
கோவிலைச் சுற்றி அந்தப்பகுதி மக்கள் கொட்டிய குப்பைகளை உடனடியாக அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாகவும், வீட்டிற்கு வீடு குப்பைகளை சரிவர வாங்க பணியாளர்கள் வருவதில்லை என்றும் அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து நகராட்சி ஆணையாளர், சேர்மன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.