உள்ளூர் செய்திகள்

நிலதரகர்கள் நல சங்கம் சார்பில் காந்திசிலைக்கு மரியாதை

Published On 2023-10-03 07:46 GMT   |   Update On 2023-10-03 07:46 GMT
  • நிலதரகர்கள் நல சங்கம் சார்பில் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  • மாவட்ட பொருளாளர் முப்பிடாதி, மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்

மகாத்மா காந்தி 155-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம் சார்பில் ராஜபாளையம் தொகுதி தலைவர் லட்சுமணன் தலைமையில் நகர செயலாளர் ராசு, பொருளாளர் ஆறுமுகம் முன்னிலையில் மாநில தலைவர் டாக்டர் கண்ணன், ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதில் மாநில துணைத்தலைவர் அய்யப்பன், மாவட்டத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் முப்பிடாதி, மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News