உள்ளூர் செய்திகள்

காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2022-08-20 08:36 GMT   |   Update On 2022-08-20 08:36 GMT
  • குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள என்.புதூர் கிராமம், கீழராஜகுலராமன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இதன் அருகே மேல ராஜ குலராமன் பஞ்சாயத்தும் உள்ளது.

40 ஆண்டுகளாக கீழராஜகுலராமன் கிராமத்திற்கு மேல ராஜ–குலராமன் பஞ்சாயத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதில் 60 குடும்பத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் அவர்களுக்கு 4 மாதங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது.

கடந்த 25 நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வழங்காததால் பொது மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை 8 மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருவாய் துறையினர் எழுதி கொடுத்தால் மட்டுமே இந்த இடத்தை விட்டு கலைந்து செல்வதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News