உள்ளூர் செய்திகள்
- செல்வ காளியம்மன் மற்றும் அனுமானுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து, பூக்களால் அலங்கரித்து சாமிக்கு மகா ஆராதனை நடந்தது.
- சுற்றுவட்டார கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டனர்.
சூளகிரி,
சூளகிரி தாலுகா உத்தனபள்ளி ஊராட்சி பழைய கொத்தூர் சாலையில் உள்ளது பழமை வாய்ந்த செல்வ காளியம்மன் மற்றும் அனுமந்த ராய சுவாமி ஆலயம்.
இங்கு புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையை முன்னிட்டு செல்வ காளியம்மன் மற்றும் அனுமானுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து, பூக்களால் அலங்கரித்து சாமிக்கு மகா மங்கள ஆரத்தி செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
இந்த பூஜைகளை கோயில் தர்மகர்த்தா விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்தனர். சுற்றுவட்டார கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டனர்.