உளுந்தூர்பேட்டை அருகே விருத்தாசலம் வாலிபர் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை
- இதனால் சந்தேகமடைந்த நில உரிமையாளர் முகமது யுசூப் மோட்டார் சைக்கிள் அருகே சென்று பார்த்தார்.
- மோட்டார் சைக்கிளை கடந்த 3 தினங்களுக்கு முன்பாக வாங்கிச் சென்றது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஒலையனூர் பகுதியில் உள்ள விவசாய நிலப் பகுதியில் ஒரு மோட் டார் சைக்கிள் கடந்த 2 நாட்களாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேக மடைந்த நில உரிமையாளர் முகமது யுசூப் மோட்டார் சைக்கிள் அருகே சென்று பார்த்தார். விவசாய நிலத்திற்கு வந்தவர்கள் யாரேணும் மோட்டார் சைக்கிளை விட்டு சென்றிருக்கலாம் என நினைத்த முகமதுயுசூப், மோட்டார் சைக்கிள் யாரு டையது மற்ற நில உரிமை யாளர்களிடம் விசாரித்தார். ஆனால், இது குறித்து யாருக்கும் தெரியவில்லை. மேலும், மோட்டார் சைக்கி ளின் அருகில் இருந்த கிணற்றின் நீரில் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பது போன்ற தெரிந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி யடைந்த முகமதுயுசூப், உளுந்தூர்பேட்டை போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசா ரித்தபோது, இது கடலூர் மாவட்டம் விருத்தா சலம் அடுத்த ஆயிபேட்டையை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் உளுந்தூர்பேட்டை போலீ சார் விசாரணை நடத்தினர். அதில், அதே ஊரைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் தமிழ்செல்வன் (வயது 28) என்பவர் இளங்கோவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளை கடந்த 3 தினங்களுக்கு முன்பாக வாங்கிச் சென்றது தெரியவந்தது. மேலும், கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் தமிழ்செல்வன் என்பதையும் உளுந்தூர்பேட்டை போலீ சார் உறுதி செய்தனர். இதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார், தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.