உள்ளூர் செய்திகள்
திசையன்விளையில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு
- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், இன்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- தச்சை கணேச ராஜா நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திசையன்விளை:
திசையன்விளை நகர அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலைய சந்திப்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், இன்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வி.பி.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட மகளிரணி செயலாளரும் ,திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் பால்துரை, அமைப்பு சாரா ஓட்டுனரணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர், நீர் வழங்கப்பட்டது.