மகளிர் உரிமை தொகை கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட பெண்கள்
- ஆர்.டி.ஓ. மூலம் கள ஆய்வு செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இதனை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி, டிஆர்ஓ. மணிமேகலை ஆகியோர் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய பதிலை அளித்தனர்.
கூட்ட அரங்கில் மனு கொடுக்க வந்த மக்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து கலெக்டரை முற்றுகையி ட்டனர்.
தொடர்ந்து தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கா ததால் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கலெக்டர் மகாபாரதி பெண்களிடம் தங்களது விண்ணப்பங்கள் பரிசீலனையும் உள்ளது.
ஆர்.டி.ஓ. மூலம் கள ஆய்வு செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விண்ணப்பித்த பத்தாயிரத்திற்கும் மேற்ப ட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் மறு விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பதிவு செய்ய தாமதமா னவர்களை உடனடியாக பதிய பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டனர்.