உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் யோகாசன சங்க துணைத்தலைவர் சிவசங்கர் பேசிய காட்சி.

பாளை வ.உ.சி. மைதானத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி- நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2022-06-19 14:33 IST   |   Update On 2022-06-19 14:33:00 IST
  • பாளையில் நாளை மறுநாள் யோகா தின நிகழ்ச்சிகள் நடக்கிறது.
  • 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர்.

நெல்லை:

நேரு யுவகேந்திரா, நெல்லை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 2,000 மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர்கள் சிவசங்கர், அமல்தாஸ், செயலாளர் அழகேச ராஜா, துணைச்செயலாளர் அதிசயராஜ், செயற்குழு உறுப்பினர் சங்கர ராமசுப்பு ஆகியோர் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட விளையாட்டு, வனத்துறை, காவல்துறை மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தமாக மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்ய வந்தால் அந்த பள்ளிக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் உள்ளிட்டவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்த விபரங்களை அறிய சங்க செயலாளர் அழகேசராஜாவை 9659819009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News