உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்.

தேவதானப்பட்டி கோவில் திருவிழாவில் வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்

Published On 2023-09-09 10:33 IST   |   Update On 2023-09-09 10:33:00 IST
  • கிருஷ்ணஜெயந்தி விழாவையையொட்டி 30 அடி உயர வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி பாலகிருஷ்ணசாமி கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலாகும்.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன் படி இந்த ஆண்டு 3 நாட்கள் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாள் நிகழ்ச்சியாக வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு 30 அடி உயரம் கொண்ட தேக்குமரம் ஊன்றப்பட்டது.

அதன்பின் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏற முயன்றனர். அவர்கள் மீது மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கம்பத்தின் உச்சியில் இருந்த பரிசை இளைஞர்கள் எடுத்து வந்தபோது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாசேகர் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News