தூத்துக்குடியில் கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய இளம்பெண்
- தூத்துக்குடி புதுக் கோட்டை நடுகூட்டுடன் காட்டை சேர்ந்தவர் சுடலை (வயது32). டிரைவர். இவரது மனைவி மகாலெட்சுமி (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.
- சுடலையின் அக்காள் இறந்துவிட்டதால் அவரது குழந்தைகளை சுடலை கவனித்து வந்துள்ளார். இது தொடர்பாக சுடலைக்கும், மகாலெட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக் கோட்டை நடுகூட்டுடன் காட்டை சேர்ந்தவர் சுடலை (வயது32). டிரைவர். இவரது மனைவி மகாலெட்சுமி (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.
கொதிக்கும்வெந்நீர்
சுடலையின் அக்காள் இறந்துவிட்டதால் அவரது குழந்தைகளை சுடலை கவனித்து வந்துள்ளார். இது தொடர்பாக சுடலைக்கும், மகாலெட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மகாலெட்சுமி, கொதிக்கும் வெந்நீரை எடுத்து சுடலை மீது ஊற்றினார். இதனால் அலறிதுடித்த சுடலை, மனைவியை தாக்கி கீழே தள்ளினார். இதில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்