தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- அருணாகரண் நேற்று மாலை திருச்செந்தூர் சாலை ஸ்பிக் நகரில் நடந்து சென்ற போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அருணாகரன் மீது மோதியது.
- இதனையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள்சாலை, குமாரசாமி நகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் அருணாகரண் (வயது 38). இவர் நேற்று மாலை திருச்செந்தூர் சாலை ஸ்பிக் நகரில் நடந்து சென்ற போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அருணாகரன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அருணாகரணுக்கு தலை உள்பட உடல் முழுதும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அருணாகரன் இரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக போக்குவரத்து விதிகளுக்கு மாறாக தூத்துக்குடி மாநகர சாலைகள், திருச்செந்தூர் சாலை, துறைமுக சாலைகளில், வலதுபுற வாகன பயணம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 'சைலன்ஸர்' இல்லாமல் இரைச்சலுடன் வாகனங்கள் ஓட்டப்படுகிறது. இதனால் தொடர் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெருக்கடியான பகுதியில் உள்ள லாரி செட்டுகளாலும் விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.