- ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார்.
- இனி வரும் காலங்கள் பொற்காலமே, மிக பெரிய வெற்றியே’ என தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்கச் சென்றார்.
ஒருவன் தன்னுடைய தொழிலில் படுதோல்வியடைந்த நிலையில், தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார்.
சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைத் தொட்டியில் தனக்குத் தேவையான பாட்டில்களை எடுத்துச் சென்றார்.
மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார்.
அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுச் சென்றது.
கடைசியாக வந்த ஒரு பசு, குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டது.
இதைப் பார்த்த, படுதோல்வியடைந்த அந்த நபர் "ஒரு சிறிய குப்பைத் தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம்" என்று நினைத்தார், தன் மனதை திடப்படுத்திக் கொண்டு, 'இனி தனக்கு தோல்வியே கிடையாது, இனி வரும் காலங்கள் பொற்காலமே, மிக பெரிய வெற்றியே' என தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்கச் சென்றார்.
-பாலா